FULL ARTICLE

சாலிவரம் கிராமத்தில் சோழர்காலத்து கல்வெட்டு,நடுகற்கள்

இன்றைய (01.03.17) தினமலர் நாளிதழில் தேன்கனிகோட்டை வட்டம் சாலிவரம் கிராமத்தில் சோழர்காலத்து கல்வெட்டும்,13 ஆம் நூற்றாண்டு சுவர்க வகை நடுகல் தொகுப்பும் கண்டறியப்பட்டுள்ளது.பற்றியசெய்தி வந்துள்ளது.செய்தியாளர் திரு.பாலசுப்பிரமணி அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் இக்கல்வெட்டை படிக்க உதவி செய்த திரு அருண்பங்கஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி.

history1

தேன்கனிகோட்டை வட்டம் சாலிவரம் கிராமத்தில் சோழர்காலத்து கல்வெட்டும்,13 ஆம் நூற்றாண்டு சுவர்க வகை நடுகல் தொகுப்பும் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வட்டம் சாலிவரம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த ஓய்சாளர் கல்வெட்டும், 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுவர்க வகையை சேர்ந்த மிகவும் பிரமாண்டமான மூன்று சதிக்கல்லும் கண்டறியப்பட்டுள்ளது.

history3

history4

history5

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம்கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத்,கிருஷ்ணமூர்த்தி,சிவா,முனேஷ் ,ஆகியோர் ஒன்றினைந்து செய்யப்பட்ட களஆய்வில் இந்த கல்வெட்டையும்,நடுகல் தொகுப்பை கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையிலிருந்து பதினைந்து கி.மீ.தூரத்தில் இருக்கிறது சாலிவரம் கிராமம்.பழமை மாறாமல் மண் மணத்தோடு வறுமையும்,வெருமையும் நிரம்பி இருக்கிறது கிராமமும் முழுவதும்.இந்த ஊரில்தான் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து தமிழ் கல்வெட்டும் ,மிகவும் பிரமாண்டபாக, வெறு எங்கும் காணமுடியாத அளவு மூன்று நடுகற்கல்களும் இருக்கின்றன.மூன்றுமே முழுசிற்பத்தையும் பார்க்கமுடியாதஅளவு ஒன்றின் மேல் ஒன்றாக குப்பை மேடுபோல் கிடத்தப்பட்டிருக்கிறது. கல்வெட்டும்,நடுகல்லும் ஒரேயிடத்தில் இருக்கின்றன. கல்வெட்டு.

history2

“..சுப..மஹாமண்டலேச்வரந்....திருபுவன.மல்ல..தழைக்காடு... கொண்....புஜபல.....வீர.....பொய்சாள...தெவர் ப்ருத்விராஜ்யம் பண்ணிச் செல்லா நின்ற ரவ்தாரிவருசம்....மறசாத்து..முடி கொண்ட சொழ வளநாட்டுச் ..சீயகல......நாட்டு ..நாட்டுச்.காமுண்டர் பனையக்காரர் புஜபு......”

கல்வெட்டு ஒன்பது வரிகள் இருக்கிறது.ஒன்பதாவது வரியும் படிக்கமுடியாத அளவு சேதப்பட்டுள்ளது.அதற்குமேலும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.ஆனால் கல்உடைக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.முதல்மூன்றுவரிகள் ஒய்சாளர்களின் மெய்கீர்த்திபோல் இருக்கிறது.சோழர்காலத்தில் செதுக்கப்பட்ட ஒய்சாளர் கல்வெட்டு என்பதை மட்டும் அரியமுடிகிறது.இடத்தை பற்றி குறிப்பிடும்போது “முடிகொண்ட சோழ மண்டலத்து இராஜேந்திர சோழவளநாடு”என்று செய்தி வருகிறது.இதை வைத்துபார்க்கும் போது,இராஜராஜன் காலத்தில்தான் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தகடூர் நாட்டிற்கு முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதற்கு பிறகு வந்த சோழ அரசர்கள் மண்டலங்களை வளநாடுகளாக பிரித்தார்கள்.அப்படி உருவானதுதான் இராஜேந்திர சோழ வளநாடு.சோழர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்த ஒய்சாள அரசர்கள் இவ்விடத்தை ஆட்சி செய்யும் போது கொடுக்கப்பட்ட நிலதானமாக இருக்கலாம்.கல்வெட்டு முழுமையாக இல்லாத காரணத்தால் யார் யாருக்காக கொடுக்கபபட்டது என்ற விவரங்களை அறியமுடியவில்லை. முதல்நடுகல் இந்தநடுகல் சிற்பம் குறுநில அரசனாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஐந்தடி அகலமும் பத்தடி உயரமும் கொண்டது.இருகால்களையும் மடித்து சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் ,வலதுகையில் வாளை கீழ்நோக்கி பிடித்தப்படி,வாளின் கூர்முனை மடித்த குதிகாலினை தொடும்படியிருக்கிறது.இடது கழுத்து பகுதியில் அணிகலன்கள் நிறைய இருக்கின்றன.இக்கற்சிலையின் வலதுபுரத்தில் ஒரு பெண்ணின் கற்சிற்பம் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.இடையிலிருந்து குதிகால்வரை வரிவரியாக ஆடை அணிந்திருப்பது போல் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளது.அரசனின் மனைவியாக இருக்கவேண்டும்.நடுவில் இருக்கும் கற்சிற்ப்த்தை சுற்றிலும் நிறையசிற்பங்கள் இருக்கின்றன.கீழ்பகுதியில் ஏழுபேர் வரிசையாக நின்று கொண்டு வாத்தியம் வாசிப்பது போலிருக்கிறது.இவர்களின்அருகிலேயே குதிரையுடன் ஒரு போர்வீரன் நிற்கிறான். மேற்பகுதியிலும்,இடதுபுரத்திலும் பத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இதுசுவர்க்கம் வகையை சேர்ந்த நடுகல்ளாகும்.இறந்தவுடன் நேரடியாக சொர்க்கம் சென்றதாகவும், அங்கே தேவலோக பெண்கள் வரவேற்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.சோழர்கள் காலத்தில் இருந்துதான் இதுமாதிரியான நம்பிக்கை வளரஆரம்பித்திருக்க வேண்டும்.அதற்குமுற்பட்ட நடுகற்களில் இது மாதிரியான சொர்க்க நடுகல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது நடுகல்.

இந்த நடுகல் சிற்ப்பத்தை மார்பிற்கு கீழ்பகுதி மட்டும்தான் பார்க்கமுடிந்தது.மேல்பகுதி முழுவதும் மிகப்பெரிய பாறைகல்லால் மூடப்பட்டிருக்கிறது.மேற்கண்டது போலவே இதுவும் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது.அதேமாதிரி அமர்ந்த நிலையில் ,ஆனால் வலது கையில் வாளுக்கு பதிலாக வேறு ஒரு கருவியிருக்கிறது.அக்கருவி எதிரிலிருக்கும் இன்னோறு சிற்பத்தை நோக்கி நீட்டப்பட்டிருக்கிறது.எதிரில் உள்ள அச்சிற்பம் தனது வலதுகையை மடக்கி தடுப்பது போலிருக்கிறது.இதில்முக்கியமானது கழுத்தில் போட்டுள்ள அணிகளன் வயிற்றுப்பகுதிவரை நீண்டிருக்கிறது.மேலும்,உடம்பு முழுவதும் ஆபரணங்கள் ,ஆரம்,கண்டிகை,காற்சிலம்பு,குண்டலம்,இடுப்பில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஆடை,இப்படி அணிகலன்கள் அதிகமாகயிருப்பதால் இப்பகுதியின் குறுநிலமன்னனாகவோ,மண்டலஅதிகாரியாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு சிறப்புமிக்க கற்சிற்பங்களும்,கல்வெட்டுகளும் இருந்தும் என்ன பயன்.அனைத்தும் பாதுகாப்பின்றி ஒரு குப்பை மேடாக காட்சியளிக்கிறது.வரலாற்றைபற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டும்.ஆயிரம் வருடமாக காப்பற்றபட்டு வந்ததை நம்மால் ஒரு ஐம்பது வருடம் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றோம். -அறம் கிருஷ்ணன் -9578468122 (அமைப்பாளர்) -பிரியன் -8124481600 (ஒருங்கிணைப்பாளர்) .கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழு


Today (01.03.17) Dinamalar

Denkanikottai circle in the newspaper engraving cholar stone inscriptions and hero stones at salivaram village, and walls of the 13th century.

AUTHOR

Loop Count

Loop Count is a website to Educate and Entertain fellow friends what we know about Current Trends. If any queries drop mail to info@loopcount.in we will revert back with answer.

COMMENTS